Monday, 7 November 2011

கணிப்"பொறி"யில் சிக்கிய கவிதைகள்






உலகையே காட்டும் கணினி அருகில்
இது தான் உலகம் என்று காட்டிய அம்மாவும்அப்பாவும் தொலைவில்!!

பண்டிகை நாள் மறந்து போனது 
வீட்டிற்கு செல்லும் நாள் எல்லாம் திருவிழா ஆனது!!

வீட்டுச் சாப்பாடு விருந்துச் சாப்பாடு ஆனது
Cubicle கிளியாய் வாழ்க்கை ஆனது!!

ஒன்றும் பூஜ்யமும் தெரிந்த கணினி முன்பு
ஒன்றும் தெரியாத பூஜ்யமாய் நின்றேன்!!

விடிய விடிய வேலை செய்தேன்
தொலைத்தது  தூக்கத்தை மட்டுமல்ல என் கனவுகளையும் தான் 

என் கனவுகளை எல்லாம் கணினி
"Zip Folder" செய்து
"Shift+Delete" செய்தது!!

ப்ளாக்போர்டில் கற்ற தமிழ்
KeyBoard ஆல் மறந்து போனது!!

வாழ்கையின் தேடல் குறைந்து போனது
Google'ல் தேடல் அதிகம் ஆனது!!!

ஒவ்வொரு முறை வீட்டை விட்டு செல்லும் போதும்
முகம் பார்த்து விடை தரும் அம்மாவும்
முகம் பார்க்காமல் விடை தரும் அப்பாவும் தருகின்ற வலிகள்
கவிதையிலும் நிரப்ப முடியாதது!!!

இது என்னுடைய மனநிலை மட்டும் அல்ல 
இது விளக்க முடியாத பலரின் தன்னிலை
இதற்கு விடை தெரியும் வரை 
இது போன்ற பயணங்கள் முடிவதில்லை!!!!

Sunday, 21 August 2011

என்னோட ராசி நல்ல ராசி!!


மணி 9- 30 ஆச்சு , பத்து மணிக்கு தான் கேப்(cab) என்று யோசித்த படியே அமர்ந்து இருந்தேன்!!

அப்போ தான் யோசனை வந்துச்சு ! நம்ம ஒரு ப்ளாக் ஆரம்பிச்சமே ,நானும் பெரிய இவன்னு, பேசாம ஒரு கதை எழுதலாமே என்று !!

Hello boss u have a text message”    செல் போன்  அடிச்சது 

பார்த்தா " 2 messages received "

1 st message சுரேஷ் 

தண்ணீல மீன் அழுதா தெரியாது !!

ஆனா நீ எங்க அழுதாலும் எனக்கு தெரியும் !!

ஏன்னா நீ என் !

நண்பேன் டா!!

 Gud N8!!

2nd மெசேஜ் மகேஷ் 

இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்!! இதுக்கு நடுவுல நமக்கு எதுக்கு ஆளு !!!?

By அமலா பாலை நினைத்து கொண்டு ஆவின் பால் சாப்பிடுவோர் சங்கம் !!

( கடவுளே இவனுகளுக்கு எல்லாம் பூஸ்டர்'எ தீராதா? என்று மூளை சொன்னது ஆனால் மனசு! டேய் ஆதி இவங்கள விட்டா உனக்கு வேற மெசேஜ்'எ வராது டா என்றது !!  )

மணி பார்த்தேன் 9-5௦ ஆச்சு !! சரி இனிமேல் எப்படி கதை எழுத  போறோம்'னு கிளம்பினேன்...

அப்போது மனதுக்குள் மணி அடித்தது (இன்னிக்காவது CAB ல நம்ம பக்கத்துல ஒரு figure உட்காருமா என்று?)

Cab என்றால்( சாப்ட்வேர் கம்பெனி'ல நைட் உசிர கொடுத்து விடிய விடிய வேலை செய்றவனுக்கு கொஞ்சம் இறக்கம் காட்டி நைட் லேட் ஆனா வீட்லயே கொண்டு போய் விடுவாங்க !! அப்ப ஒரே ஏரியா போரவங்கெல்லாம் ஒரே கேப்'ல  ஏறுவாங்க !! இந்த சாப்ட்வேர் கம்பெனி'ல இருந்தும் வெட்டி பசங்களா figure இல்லாம இருக்குற என்ன மாதிரி பசங்களுக்கு அப்ப அப்ப எப்பாவது ஒரு figure பக்கத்துல வந்து உட்காரும் !!! ஓகே வா!!)

சரி இன்னிக்கு நம்ம லக் எப்படி இருக்கு என்று என் வீட்டுக்கு செல்லும் கேப் இடம் நெருங்கினேன் !!   

கேப்'ல மல் யுத்த வீரன் மாதிரி ரெண்டு பேர் !!

கடவுளே எனக்கு நீ figure தான் தரல !! இந்த torture எதுக்கு என்று புலம்பினேன் !!

நல்ல வேலை ரெண்டு பேரும் எனக்கு ஜன்னல் ஓர சீட் தந்தாங்க, இல்லை னா லெமன் ஜூஸ் தான் !!

பக்கத்தில் இருந்தது ஒரு ஹிந்தி பையன் !!

ஆள் நல்ல வைட்'ஆ !! வெயிட்'ஆ 

வந்ததில் இருந்து செல்போன் 'லயே பேசிட்டு இருந்தான்!! 

அவன் பேசிய ஹிந்தி வார்த்தைகள் !!

ம்ம்ம்..
 பிர்ர்..
போலோ..
(நமக்கு தெரிஞ்ச ஹிந்தி எல்லாம் !!
ஏக் கவ் மே !! ஏக் கிஸான்!! ரகு  தாதா!!)

ஆனா என்ன பேசி இருப்பான் மனசுக்குள்ள ஒரு Guess 
ம்ம்ம்..
அப்புறம்..
வேற ..
சொல்லு ...

ஏன்னா லவ் பண்ற எல்லாரும் எத்தன மணி நேரம் பேசினாலும் இத தான் பேசுறாங்க!!!

வண்டி கிளம்பியது !!

பேசிட்டே இருந்தவன் Cab is gonna start , i will message u என்று கால்'ஐ கட் செய்து என்னை பார்த்து சிரித்தான் (ஏன்டா டேய் நான் வந்து பத்து நிமிஷம் ஆச்சு இப்ப தான் நான் தெரிஞ்சனா )

அவன் message டைப் செய்தான் 'ஹாய் ஸ்வீடி"

நான் பார்ப்பதை அவன் பார்த்துட்டான் .. அவன் என்ன பாத்து ஒரு லுக்கு விட்டான் ...(ஏன்டா இதெல்லாம் ஒரு பொழப்பா)

கொஞ்ச தூரம் வண்டி சென்றது 

"Hello boss u have a text message”

அப்போது நான் அவனை கர்வத்தோடு பார்த்தேன் ( பாத்தில எங்களுக்கும் மெசேஜ் வரும் )

அதற்கு அவன் ஒரு லுக் விட்டான் (டேய் மெசேஜ் கு ரிங்டோன் வைக்கும் போதே தெரியுது உனக்கு figure இல்லன்னு !! சும்மா சீன் போடாத )

நான் வானத்தை பார்த்து கொண்டே சென்றேன் .. எனக்கு வானத்தை பார்த்து பேசுவது பழக்கம் ..

(ஆதி எத்தன நாள் தான் இப்படியே இருக்கறது !!

கொஞ்சமாவது  வாழ்க்கை ல சந்தோஷம் வேண்டாமா ?

மத்தவங்க மாதிரி பொண்ணுங்க கிட்ட பேசு !! caring'ஆ இரு டா !!

அது உனக்கு  வராது தான் !!

நம்ம வாழ்கை இப்படியே போயிடுமா?)

அப்போது என் முகத்தில் ஒரு துளி பட்டது !!

நினைவுக்கு வந்தேன் !!

வண்டி கண்ணாடியில் தண்ணீர் அடித்து தெளித்தது..

செம மழை !

வண்டி பாதி வழியை கடந்து இருந்தது ..

அப்போது என் பக்கத்தில் இருந்தவன் 

Can u please translate wat i am tellin to the driver என்றான்?

(நம்ம தான் பாசக்கார கூட்டம் ஆச்சே!!)

Ya!! Ok!! 

அவன் சொல்ல சொல்ல நானும் வழியை டிரைவர் கு சொன்னேன் !!

இதில் நானும் டிரைவர்'ம் நல்லா பேச ஆரம்பித்தோம் 

ஆமா ணே எப்படி இந்த மழைலயும் வண்டி ஓட்றீங்க?

எல்லாம் குத்து மதிப்பா தான் தம்பி !!

( குத்து  மதிப்பாவா !! வாழ்கைல எதுவுமே பாக்கலையே )

செல் பார்ட்டி இறங்கும் இடம் வந்தது ! இறங்கி thanks என்றான் !!

ஓகே!! என்றேன் 

அடுத்து நான் இறங்கும் இடம் ..

அப்போது என்னிடம் ஒரு மெல்லிய குரல் ..

Can you tell the driver to stop b4 V P R apartments?

நானும் திரும்பி பார்த்தேன் !! செம figure 

(அட இவன் இம்சை ல இத பாக்காம விட்டுடோமே !!

ஆனா கடவுள் எனக்கும் வாய்ப்பு தந்து இருந்தார் !!

அங்கு தான் நானும் இறங்க வேண்டும் !!)

I ll also get down there oly!! என்றேன் 

ஓகே ! என்றாள் 

அண்ணா!! V P R appartment கிட்ட நிறுத்துங்க !!

இன்னும் மழை பட்டையை கிளப்பி கொண்டு இருந்தது !!

அப்போது அவள் கையில் குடையை பார்த்தேன் 

மனதுக்குள் மழை பெய்தது !!ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்தது !! 

கொக்கா மக்கா!! செம சான்ஸ் டா!!

( எப்படியும் gate ல இருந்து உள்ள பில்டிங்க்கு போக 200 அடி நடக்கனும்)

செம மழை ,கைல குடை , அதுவும் ஒரே குடை ,ரெண்டு பேரு , செம figure , எப்படியும் குடைக்குள்ள  கூப்பிட்டு தான் ஆகனும்!!

கடவுளுக்கு நன்றி சொன்னேன் !!

அப்போது Harris Jayaraj ன் மஜ்னு பட பாட்டு background’ல் ஒலித்தது 

( கற்றை மழையில் நீ நனைந்து இருக்க ,

ஒற்றை குடையில் ஓர் அழகி உன்னை ,

குடைக்குள் அழைத்தால் நீயும் லக்கி தான் !

லக்கி தான் ! லக்கி தான் !

லக்கி தான் ! லக்கி தான் !

லக்க   லக்க லக்கி தான்!)

அப்போது chorus இல் ஒரு வாய்ஸ் .. stop here stop here 

நினைவுக்கு வந்து பார்த்தேன் appartment ல் என் block முன்பு வண்டி நின்றது 

எனக்கு வந்த எரிச்சலுக்கு 

எண்ணங்  ணா  உள்ளயே வந்துடீங்க?!!!!!

என்ன தம்பி இவ்வளவு நல்லா பேசிட்டு இருந்தீங்க .. மழை வேற வருது .. அதான் உள்ளயே 
வந்துட்டேன் !!

வண்டியை விட்டு இறங்கினேன் !!

வானத்தை பார்த்தேன் !!

எனக்குள்ளே சிரித்து கொண்டேன் .. என்னை அறியாமல் என் உதட்டில் புன்னகை !!

ஆதி உன் ராசி அப்படி டா !! என்று ரூம் ஐ நோக்கி சென்றேன் !!

அப்போது எனக்கு ஒரு யோசனை!! இதை ஏன் நம்ம ப்ளாக் ல எழுத கூடாது?!!










Tuesday, 19 July 2011

முதல் பயணம்


இடம் : ரயில் பெட்டி
                                                       

  ஒருவழியாக எனது Compartment '  கண்டுபிடித்து என் இடத்தை பிடித்துஊருக்கு செல்லும் மகிழ்ச்சியில் உட்கார்ந்தேன் .

  
எதிரில் என்னை போல்என்  வயது உள்ள ஒருவர் உட்கார்ந்திருந்தார் .

  TTR வரும் வரை பேச்சு துணைக்கு ஆச்சு என்று பேச ஆரம்பித்தேன்வழக்கம் போல்

 சார், Fan போட்டுக்கவா , சென்னை செம வெயில் இல்ல சார் ? என்றேன் தலை அசைந்தது மெதுவாக.

“அப்புறம் சார்என் பேர் ஆதி” என்று கை நீட்டினேன்

அவரும் கை கொடுத்தார்பெயர் சொல்லவில்லை .

இருந்தாலும் TTR  வராத காரணத்தால்மற்றும்  Compartmentல் எந்த Figure' ம் இல்லாத காரணத்தால் பேச்சை தொடர்ந்தேன்.

"சார், உங்க பேரு?"

"விடுதலை"

"எது காந்தி தாத்தா வாங்கி தந்தாரே " என்று மொக்கை ஜோக் அடித்தேன்

மொக்கையை தாங்கி கொண்டு மெலிதாக சிரித்தார் .

அப்போது என் phone சிணுங்கியது, என் கேர்ள் Friend
(வழக்கம் போல் சிரிப்பில் ஆரம்பித்து வெறுப்பில் முடிந்தது)
வேறு யாரும் இல்லாத காரணத்தால் அவரிடமே புலம்பினேன்

"யாரையும் லவ் மட்டும் பண்ணிராதீங்க சார், பொண்ணுங்கனாவே கடுப்பு ஆவுது"

மறுபடியும் ஒரு புண்சிரிப்பு( முதலில் மூன்றாம்  பிறையாக , இப்பொழுது சற்று மலர்ந்திருந்தது )

"அப்புறம் எந்த கட்சிக்கு  சார்  ஓட்டு போட்டிங்க ?" 

" எனக்கு ஓட்டு உரிமை இல்லை "

"ரொம்ப நல்லது சார், இங்க எந்த தலைவன் ஒழுங்கா இருக்கான் ஓட்டு போட, எங்க பாத்தாலும் ஒரே லஞ்சம், ஊழல், எதுக்கு எடுத்தாலும் காசு, பேசாம எங்கையாவது வெளிநாட்டுக்கு போயிரலாம்'னு இருக்கு "

இதை சொல்லி முடிக்கும் போது அவர் கண்களில் சற்று மாறுதலை பார்த்தேன்.
அவர் உண்மையாக பேச தொடங்கினார்.

"ஐயா, நாடு ,தலைவன், காதலி, வேலை, இப்படி வாய்க்கு வந்த படி பேச சுதந்திரம், அனைத்தும் இருந்தும் நீங்கள் நாடு மாற துடிக்கிறீர்கள்,
ஆனால், ஒரு நாட்டை, தலைவனை, சொந்தங்களை, சுதந்திரத்தை தொலைத்த நாங்கள்
 எங்கள் நாட்டில் இருக்கவோ  அல்லது இறக்கவோ தான் ஆசை படுகிறோம் ". 

(மனதில் விடை தெரிந்தாலும், நாக்கு முந்திக் கொண்டது)
"நீங்க..... எந்த நாடு?"

"யாழ்ப்பாணம் ... இலங்கை..."

Friday, 8 July 2011

                               இது தான் ஆரம்பம்

















வணக்கம்,
இயங்காத வாழ்க்கையில் இன்பமில்லை
இயங்கு! இயங்கு! மனிதனே
இயங்கு, வெற்றியை நோக்கியாவது -
தோல்வியை நோக்கியாவது
                             - வைரமுத்து

     என்னை மிகவும் கவர்ந்த வைரமுத்துவின்  வரிகள் இவை, ஒவ்வொரு மனிதனும் இந்த உலகில் ஆசைப்படுவது, காலம் என்ற கற்சுவரில் தன் பெயரை பொறித்து விட வேண்டும் என்பது தான். ஆனால் காலத்தின் சுவரில் எஞ்சி இருப்பது சில மனிதர்களும், பல  படைப்புகளும். அதற்கு எடுத்துக்காட்டே நான்கு வேதங்களும், திருக்குறளும், குரானும், பைபிளும், அப்படிப்பட்ட முயற்சியே இந்த Blog ம்.

    ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் எதிர்பார்ப்பது தன்னிறைவு. அப்படி தன்னிறைவு அடையாமல் தன் திறமையை வீணடித்துக் கொண்டிருக்கும், இந்த நடுத்தரச் சமுதாயத்தின் செல்ல  பிள்ளைகளான Software Engineer களில் நானும் ஒருவன் . என் ஏக்கங்களை, கோபங்களை, விரக்திகளை, தோல்விகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத இந்த கணினி உலகத்தில், என் உள்உணர்வுகளை வெளிச்சமிட்டுக் காட்ட இந்த எழுத்துப்பிழையை ஆரம்பிக்கிறேன். எந்த ஒரு செயலுமே பிழையில்லாமல் இருக்காது என்ற பொது தத்துவத்தையே  என் தலைப்பாய் ஏற்று, இந்த வலைதளத்தை துவக்குகிறேன்.  இதற்கு தாங்கள் ஆதரவு  தர வேண்டுகிறேன்........


---தொடரும்..