Friday, 8 July 2011

                               இது தான் ஆரம்பம்

















வணக்கம்,
இயங்காத வாழ்க்கையில் இன்பமில்லை
இயங்கு! இயங்கு! மனிதனே
இயங்கு, வெற்றியை நோக்கியாவது -
தோல்வியை நோக்கியாவது
                             - வைரமுத்து

     என்னை மிகவும் கவர்ந்த வைரமுத்துவின்  வரிகள் இவை, ஒவ்வொரு மனிதனும் இந்த உலகில் ஆசைப்படுவது, காலம் என்ற கற்சுவரில் தன் பெயரை பொறித்து விட வேண்டும் என்பது தான். ஆனால் காலத்தின் சுவரில் எஞ்சி இருப்பது சில மனிதர்களும், பல  படைப்புகளும். அதற்கு எடுத்துக்காட்டே நான்கு வேதங்களும், திருக்குறளும், குரானும், பைபிளும், அப்படிப்பட்ட முயற்சியே இந்த Blog ம்.

    ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் எதிர்பார்ப்பது தன்னிறைவு. அப்படி தன்னிறைவு அடையாமல் தன் திறமையை வீணடித்துக் கொண்டிருக்கும், இந்த நடுத்தரச் சமுதாயத்தின் செல்ல  பிள்ளைகளான Software Engineer களில் நானும் ஒருவன் . என் ஏக்கங்களை, கோபங்களை, விரக்திகளை, தோல்விகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத இந்த கணினி உலகத்தில், என் உள்உணர்வுகளை வெளிச்சமிட்டுக் காட்ட இந்த எழுத்துப்பிழையை ஆரம்பிக்கிறேன். எந்த ஒரு செயலுமே பிழையில்லாமல் இருக்காது என்ற பொது தத்துவத்தையே  என் தலைப்பாய் ஏற்று, இந்த வலைதளத்தை துவக்குகிறேன்.  இதற்கு தாங்கள் ஆதரவு  தர வேண்டுகிறேன்........


---தொடரும்..

1 comment:

  1. எண்ணற்ற காலத்தின் சுவடுகளை நாம் கண்டுள்ளோம் ஆனால் நம்மை போல் மனிதர்கள், பல படைப்புகளை கண்டு விமர்சனம், கேலி, செய்வதில் தான் ஆர்வமாக இருக்கிறோம்.
    ஆததினுமும் மீறி சில மனிதர்கள் அதை பாராட்டுகிறார்கள், அத்தனை கண்டு பெருமை அடைகிறோம்....

    மனிதர்களின் எண்ணங்கள், யாவும் செயல் வடிவில் வருவதில்லை... ஏன் எனில் செயல்களை செய்வதில் எவருக்கும் போதிய மன வலிமை இல்லை.... ஆகையால் , ஏக்கங்கள், கோபங்கள், விரக்திகள், தோல்விகள் ஏற்படுகிறது....

    நாம் அறிந்த நான்கு வேதங்களும், திருக்குறளும், குரானும், பைபிளும் இருந்தாலும் யாரும் அதை பின்பற்றுவதில்லை...

    இதில் நானும் அடங்குவேன்.....

    இது அருமையான தலைப்பு... நட்பு ரீதியாக உரையாட இது ஒரு சிறந்த வழி.....

    எழுத்தாளர்களின் சங்கமமாக இது அமையட்டும்...

    வாழ்த்துகள்...
    உன் அருமை நண்பன்,
    சரவணன்.

    ReplyDelete