மணி 9- 30 ஆச்சு , பத்து மணிக்கு தான் கேப்(cab) என்று யோசித்த படியே அமர்ந்து இருந்தேன்!!
அப்போ தான் யோசனை வந்துச்சு ! நம்ம ஒரு ப்ளாக் ஆரம்பிச்சமே ,நானும் பெரிய இவன்னு, பேசாம ஒரு கதை எழுதலாமே என்று !!
“Hello boss u have a text message” செல் போன் அடிச்சது
பார்த்தா " 2 messages received "
1 st message சுரேஷ்
தண்ணீல மீன் அழுதா தெரியாது !!
ஆனா நீ எங்க அழுதாலும் எனக்கு தெரியும் !!
ஏன்னா நீ என் !
நண்பேன் டா!!
Gud N8!!
2nd மெசேஜ் மகேஷ்
இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்!! இதுக்கு நடுவுல நமக்கு எதுக்கு ஆளு !!!?
By அமலா பாலை நினைத்து கொண்டு ஆவின் பால் சாப்பிடுவோர் சங்கம் !!
( கடவுளே இவனுகளுக்கு எல்லாம் பூஸ்டர்'எ தீராதா? என்று மூளை சொன்னது ஆனால் மனசு! டேய் ஆதி இவங்கள விட்டா உனக்கு வேற மெசேஜ்'எ வராது டா என்றது !! )
மணி பார்த்தேன் 9-5௦ ஆச்சு !! சரி இனிமேல் எப்படி கதை எழுத போறோம்'னு கிளம்பினேன்...
அப்போது மனதுக்குள் மணி அடித்தது (இன்னிக்காவது CAB ல நம்ம பக்கத்துல ஒரு figure உட்காருமா என்று?)
Cab என்றால்( சாப்ட்வேர் கம்பெனி'ல நைட் உசிர கொடுத்து விடிய விடிய வேலை செய்றவனுக்கு கொஞ்சம் இறக்கம் காட்டி நைட் லேட் ஆனா வீட்லயே கொண்டு போய் விடுவாங்க !! அப்ப ஒரே ஏரியா போரவங்கெல்லாம் ஒரே கேப்'ல ஏறுவாங்க !! இந்த சாப்ட்வேர் கம்பெனி'ல இருந்தும் வெட்டி பசங்களா figure இல்லாம இருக்குற என்ன மாதிரி பசங்களுக்கு அப்ப அப்ப எப்பாவது ஒரு figure பக்கத்துல வந்து உட்காரும் !!! ஓகே வா!!)
சரி இன்னிக்கு நம்ம லக் எப்படி இருக்கு என்று என் வீட்டுக்கு செல்லும் கேப் இடம் நெருங்கினேன் !!
கேப்'ல மல் யுத்த வீரன் மாதிரி ரெண்டு பேர் !!
கடவுளே எனக்கு நீ figure தான் தரல !! இந்த torture எதுக்கு என்று புலம்பினேன் !!
நல்ல வேலை ரெண்டு பேரும் எனக்கு ஜன்னல் ஓர சீட் தந்தாங்க, இல்லை னா லெமன் ஜூஸ் தான் !!
பக்கத்தில் இருந்தது ஒரு ஹிந்தி பையன் !!
ஆள் நல்ல வைட்'ஆ !! வெயிட்'ஆ
வந்ததில் இருந்து செல்போன் 'லயே பேசிட்டு இருந்தான்!!
அவன் பேசிய ஹிந்தி வார்த்தைகள் !!
ம்ம்ம்..
பிர்ர்..
போலோ..
(நமக்கு தெரிஞ்ச ஹிந்தி எல்லாம் !!
ஏக் கவ் மே !! ஏக் கிஸான்!! ரகு தாதா!!)
ஆனா என்ன பேசி இருப்பான் மனசுக்குள்ள ஒரு Guess
ம்ம்ம்..
அப்புறம்..
வேற ..
சொல்லு ...
ஏன்னா லவ் பண்ற எல்லாரும் எத்தன மணி நேரம் பேசினாலும் இத தான் பேசுறாங்க!!!
வண்டி கிளம்பியது !!
பேசிட்டே இருந்தவன் Cab is gonna start , i will message u என்று கால்'ஐ கட் செய்து என்னை பார்த்து சிரித்தான் (ஏன்டா டேய் நான் வந்து பத்து நிமிஷம் ஆச்சு இப்ப தான் நான் தெரிஞ்சனா )
அவன் message டைப் செய்தான் 'ஹாய் ஸ்வீடி"
நான் பார்ப்பதை அவன் பார்த்துட்டான் .. அவன் என்ன பாத்து ஒரு லுக்கு விட்டான் ...(ஏன்டா இதெல்லாம் ஒரு பொழப்பா)
கொஞ்ச தூரம் வண்டி சென்றது
"Hello boss u have a text message”
அப்போது நான் அவனை கர்வத்தோடு பார்த்தேன் ( பாத்தில எங்களுக்கும் மெசேஜ் வரும் )
அதற்கு அவன் ஒரு லுக் விட்டான் (டேய் மெசேஜ் கு ரிங்டோன் வைக்கும் போதே தெரியுது உனக்கு figure இல்லன்னு !! சும்மா சீன் போடாத )
நான் வானத்தை பார்த்து கொண்டே சென்றேன் .. எனக்கு வானத்தை பார்த்து பேசுவது பழக்கம் ..
(ஆதி எத்தன நாள் தான் இப்படியே இருக்கறது !!
கொஞ்சமாவது வாழ்க்கை ல சந்தோஷம் வேண்டாமா ?
மத்தவங்க மாதிரி பொண்ணுங்க கிட்ட பேசு !! caring'ஆ இரு டா !!
அது உனக்கு வராது தான் !!
நம்ம வாழ்கை இப்படியே போயிடுமா?)
அப்போது என் முகத்தில் ஒரு துளி பட்டது !!
நினைவுக்கு வந்தேன் !!
வண்டி கண்ணாடியில் தண்ணீர் அடித்து தெளித்தது..
செம மழை !
வண்டி பாதி வழியை கடந்து இருந்தது ..
அப்போது என் பக்கத்தில் இருந்தவன்
Can u please translate wat i am tellin to the driver என்றான்?
(நம்ம தான் பாசக்கார கூட்டம் ஆச்சே!!)
Ya!! Ok!!
அவன் சொல்ல சொல்ல நானும் வழியை டிரைவர் கு சொன்னேன் !!
இதில் நானும் டிரைவர்'ம் நல்லா பேச ஆரம்பித்தோம்
ஆமா ணே எப்படி இந்த மழைலயும் வண்டி ஓட்றீங்க?
எல்லாம் குத்து மதிப்பா தான் தம்பி !!
( குத்து மதிப்பாவா !! வாழ்கைல எதுவுமே பாக்கலையே )
செல் பார்ட்டி இறங்கும் இடம் வந்தது ! இறங்கி thanks என்றான் !!
ஓகே!! என்றேன்
அடுத்து நான் இறங்கும் இடம் ..
அப்போது என்னிடம் ஒரு மெல்லிய குரல் ..
Can you tell the driver to stop b4 V P R apartments?
நானும் திரும்பி பார்த்தேன் !! செம figure
(அட இவன் இம்சை ல இத பாக்காம விட்டுடோமே !!
ஆனா கடவுள் எனக்கும் வாய்ப்பு தந்து இருந்தார் !!
அங்கு தான் நானும் இறங்க வேண்டும் !!)
I ll also get down there oly!! என்றேன்
ஓகே ! என்றாள்
அண்ணா!! V P R appartment கிட்ட நிறுத்துங்க !!
இன்னும் மழை பட்டையை கிளப்பி கொண்டு இருந்தது !!
அப்போது அவள் கையில் குடையை பார்த்தேன்
மனதுக்குள் மழை பெய்தது !!ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்தது !!
கொக்கா மக்கா!! செம சான்ஸ் டா!!
( எப்படியும் gate ல இருந்து உள்ள பில்டிங்க்கு போக 200 அடி நடக்கனும்)
செம மழை ,கைல குடை , அதுவும் ஒரே குடை ,ரெண்டு பேரு , செம figure , எப்படியும் குடைக்குள்ள கூப்பிட்டு தான் ஆகனும்!!
கடவுளுக்கு நன்றி சொன்னேன் !!
அப்போது Harris Jayaraj ன் மஜ்னு பட பாட்டு background’ல் ஒலித்தது
( கற்றை மழையில் நீ நனைந்து இருக்க ,
ஒற்றை குடையில் ஓர் அழகி உன்னை ,
குடைக்குள் அழைத்தால் நீயும் லக்கி தான் !
லக்கி தான் ! லக்கி தான் !
லக்கி தான் ! லக்கி தான் !
லக்க லக்க லக்கி தான்!)
அப்போது chorus இல் ஒரு வாய்ஸ் .. stop here stop here
நினைவுக்கு வந்து பார்த்தேன் appartment ல் என் block முன்பு வண்டி நின்றது
எனக்கு வந்த எரிச்சலுக்கு
எண்ணங் ணா உள்ளயே வந்துடீங்க?!!!!!
என்ன தம்பி இவ்வளவு நல்லா பேசிட்டு இருந்தீங்க .. மழை வேற வருது .. அதான் உள்ளயே
வந்துட்டேன் !!
வண்டியை விட்டு இறங்கினேன் !!
வானத்தை பார்த்தேன் !!
எனக்குள்ளே சிரித்து கொண்டேன் .. என்னை அறியாமல் என் உதட்டில் புன்னகை !!
ஆதி உன் ராசி அப்படி டா !! என்று ரூம் ஐ நோக்கி சென்றேன் !!
அப்போது எனக்கு ஒரு யோசனை!! இதை ஏன் நம்ம ப்ளாக் ல எழுத கூடாது?!!

en machan unaku mattum ippadi nadakuthu............ manam thalarathe....... vidaa muiarchi viswa rooba vetri.............
ReplyDeletevery funful...!!!! andavan nallavangala sothipan aana kai vida maten...... its all in the game man!!!!... title siuts u as well!!
ReplyDeleteஜெயகாந்தன் ,சுஜாதா , அகிலன் வரிசையில் இன்னொரு நல்ல எழுத்தாளர்
ReplyDelete